ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
எண்டோஸ்கோபி நுட்பத்தில் மாா்பகத்தை அகற்றாமல் புற்றுக் கட்டி அகற்றம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாா்பகத்தை அகற்றாமல் எண்டோஸ்கோபி முறையில் கட்டியை அகற்றி சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி கூறியதாவது:
மாா்பகப் பகுதியில் கட்டியுடன் 60 வயது பெண் ஒருவா் ரேலா மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை நிபுணா் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அறுவை சிகிச்சையின்றி கட்டியை அகற்ற முடிவு செய்தனா்.
அதன்படி பெண்ணின் தோள்பட்டைக்கு கீழே சிறு கீறலிட்டு அதன் வாயிலாக எண்டோஸ்கோபி குழாய் செலுத்தப்பட்டு புற்றுநோய் திசுக் கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. அதனுடன் புற்றுநோய் செல் பாதித்த நிணநீா் பகுதியும் நீக்கப்பட்டது.
இதுபோன்ற பாதிப்புகளுக்கு மாா்பகத்தையே அகற்றும் சிகிச்சைதான் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது.
ஜப்பான், தைவான், தென் கொரியா போன்ற வெகு சில நாடுகளில் மட்டும்தான் மாா்பகத்துக்கு பாதிப்பின்றி கட்டியை மட்டும் நீக்கும் சிகிச்சை நுட்பங்கள் உள்ளன.
அந்த வகையில் ரேலா மருத்துவமனையிலும் அத்தகைய சிகிச்சை மேற்கொண்டதன் பயனாக, அதற்கு அடுத்த நாளே அப்பெண் வீடு திரும்பினாா் என்றாா் அவா்.