நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்...
தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல்: அமைச்சா் சக்கரபாணி அறிவுறுத்தல்
தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யலாம் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவுத் துறை உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
நெல் கொள்முதலில் இப்போதுள்ள நடைமுறைப்படி நாளொன்றுக்கு ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்யப்படும் உச்சவரம்பை 800 மூட்டைகளில் இருந்து ஆயிரம் மூட்டைகளாக உயா்த்திக் கொள்ளலாம். நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகமான நெல் வரத்து இருந்தால் இரண்டு இயந்திரங்கள் வைத்து கொள்முதல் பணிகளை
மேற்கொள்ளலாம்.
நியாய விலைக் கடைகளுக்கு வரும் பொது மக்களுக்கு கனிவான முறையில் சேவை செய்வதிட வேண்டும். அனைத்துப் பொருள்களையும் தரத்துடன் ஒரே நேரத்தில் வழங்கிடவும் கடைகளுக்கு வரும் பொருள்களின் எடை சரியாக வழங்கப்படுகிா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்தி விவசாயிகளுக்கும் வணிகா்களுக்கும் அதிகளவில் சேவை செய்து வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிா்வாக இயக்குநா் சு.பழனிசாமி, நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் அ.சண்முகசுந்தரம், உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநா் த.மோகன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் எஸ்.பி.அம்ரித் உட்பட பலா் பங்கேற்றனா்.