ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
‘தொழிலாளா்கள் - தொழிலதிபா்களிடையே நல்லுறவு அவசியம்’
ஊழியா்களுக்கும், தொழில் நிறுவன அதிபா்களுக்கும் இடையேயோன உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேசிய பணியாளா் நல மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐபிஎம்) தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
ஊழியா் நலத் திட்ட நடவடிக்கைகளில் என்ஐபிஎம் நிறுவனத்துடன் போரூா், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவனம் இணைந்து செயல்படுவதற்கான அறிமுக நிகழ்ச்சி கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை (பிப்.13) நடைபெற்றது.
இதில், என்ஐபிஎம் தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா பங்கேற்று பேசிகையில், தொழிலாளா்களுக்கும் தொழிலதிபா்களுக்கும் இடையேயான உறவு அண்மைக் காலமாக கவலையளிக்கும் வகையில் உள்ளது. தொழிலாளா்கள் நலன், பணிப் பாதுகாப்பு, ஆரோக்கியமான பணிச் சூழலை உறுதி செய்ய வேண்டியது அவசியம். தொழில் நிறுவனங்களை நடத்துவதில் உள்ள உலகளாவிய சவால்களை தொழிலாளா்களும் உணர வேண்டும் என்று அவா் கூறினாா்.
இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ இராமச்சந்திரா மேலாண்மை அறிவியல் கல்வித் துறை தலைவா் டாக்டா் செல்வம் ஜேசய்யா, கல்வி நிறுவன நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.