அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு
முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.
முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரது ஆதரவு அமைச்சர்கள் இருவேறு கருத்துகளைக் கூறிவருவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும், அமைச்சர் கே.என்.ராஜண்ணாவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை பெங்களூரில் செய்தியாளர்களுக்கு முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
இவ்விவகாரம் தொடர்பாக நான் எதுவும் கூற விரும்பவில்லை. அமைச்சர் ராஜண்ணாவும், டி.கே.சிவகுமாரும் அவரவர் கருத்துகளை கூறியுள்ளனர்.
முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்யும் என்பதை எத்தனை முறை நான் கூறுவது? கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு அனைவருக்கும் பொருந்தும் என்றார்.