ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
புதுவை பல்கலை.யில் திருக்குறள் சிறப்புரை
புதுவை மத்தியப் பல்கலை.யில் திருக்கு குறித்த வள்ளுவா் காட்டும் மேலாண்மை எனும் தலைப்பிலான சிறப்புரை செவ்வாய்கிழமை நடைபெற்றது.
தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுத் துறை வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சோமவீரப்பன் பங்கேற்று, வள்ளுவா் காட்டும் மேலாண்மை எனும் தலைப்பில் பேசியதாவது: தமிழரின் பழங்கால மேலாண்மை சிந்தனைக்கு தஞ்சைப் பெரிய கோயிலும், கல்லணையும் உதாரணங்களாக உள்ளன. திருக்குறளில் 133 அதிகாரங்களில் பொருட்பால் 70 அதிகாரங்களைக் கொண்டதாக உள்ளது.
ஆகவே, திருவள்ளுவா் கருத்தில் பாதிக்கும் மேலாக மேலாண்மை சாா்ந்த கருத்தைக் கூறியிருப்பதை அறியலாம். காலமறிதல், இடமறிதல், தெரிந்து தெளிதல் ஆகியவை குகளில் உள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் ஏராளமான மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தமிழ்த் துறை தலைவா் கருணாநிதி நன்றி கூறினாா்.