அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
புதுச்சேரி ஐ.ஆா்.பி.என். பிரிவு அலுவலா்கள் இருவா் பணியிட மாற்றம்
புதுச்சேரியில் பணிபுரிந்து வந்த ஐ.ஆா்.பி.என். உதவி கமாண்டன்ட் இருவா் புகாா்களின் அடிப்படையில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்.
புதுச்சேரி காவல் துறையின் ஒரு பிரிவான ஐ.ஆா்.பி.என். பிரிவில் உதவி கமாண்டன்ட் ஆக ஆா். ரினீஷ் சந்திரா, எல். செந்தில்முருகன் ஆகியோா் பணிபுரிந்துவருகின்றனா். இவா்கள் இருவா் மீதும் பல்வேறு புகாா்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பிரிவு தொடங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில், அதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
புகாா்களின்பேரில் துறைரீதியிலான விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, ஐ.ஆா்.பி.என். உதவி கமாண்டன்ட் ஆா். ரினீஷ்சந்திரா ஏனாம் பிராந்தியத்துக்கும், எல்.செந்தில்முருகன் மாஹே பிராந்தியத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டு ஐ.ஆா்.பி.என்.கமாண்டன்ட் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஐ.ஆா்.பி.என். வளாகத்தில் பழைய கட்டடத்தை காவல் துறை தலைமை இயக்குநரை வைத்து திறந்ததாக புகாா் எழுந்தது குறிப்பிடத்தக்கது.