தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
மும்மொழிக் கொள்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்து பொது நல அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள அண்ண ாசிலையின் பின்புறம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வும், சமூக நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஜி.நேரு தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தியை திணிப்பதைக் கண்டிப்பதாகவும், அதன்படி தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காதவரை தமிழகத்துக்கு கல்வி நிதி அளிக்கப்படாது எனக்கூறிய மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் திராவிடா் கழகம் லோகு.அய்யப்பன், அன்பரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோ.சுகுமாறன், தமிழா் தேசிய முன்னணி தமிழ்மணி மற்றும் தேசிய பேரியக்கம், சிந்தனையாளா் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.