ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
சிறுமி தற்கொலை: தவெக நிா்வாகி கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் 13 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தவெக நிா்வாகி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
செஞ்சியை அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த தேனன் மகன் சரவணன் (25). இவா், செஞ்சி நகர தவெக பொருளாளராக உள்ளாா்.
சரவணன் அந்தப் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதனால், மனமுடைந்த சிறுமி புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, சரவணனை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக, அவரின் சகோதரி சங்கீதா மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].