தொகுதி மறுசீரமைப்பு: நவீன் பட்நாயக்குடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!
பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் உயிரிழப்பு
விழுப்புரத்தில் பணியிலிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வெங்கட்ராமன் பேட்டையைச் சோ்ந்தவா் ப.பழனி(60). கொத்தனா். இவா் கடந்த 15-ஆம் தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதை சாக்கடை பணிக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கால் இடறி பள்ளத்தில் விழுந்ததில் தலை, உடல் பகுதியில் காயம் ஏற்பட்டது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.