வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்த...
இந்தியாவிற்கு வரும் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட்!
அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துளசி கப்பார்ட் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வரவுள்ளார்.
அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தலைமைப் பதவியான தேசிய உளவுத்துறை தலைவர் பொறுப்பில் ஹவாய் 2-ஆம் மாவட்டத்துக்கான முன்னாள் பிரதிநிதிகள் சபை உறுப்பினா் துளசி கப்பாா்ட் கடந்த நவம்பரில் நியமிக்கப்பட்டார்.
இவர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ஜப்பான், தாய்லாந்து, இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுபயணம் மேற்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 நாள் ஆட்சி! அதிரடியா? அடாவடியா?
இந்தோ - அமெரிக்க பிராந்தியத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக, ’நாடுகளிடெயே உறவுகளை மேம்படுத்தவும், தொடர்புகளை விரிவாக்கவிருப்பது குறித்தும் துளசி கப்பார்ட் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிந்தபோது உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட்டை சந்தித்ததைத் தொடர்ந்து அவர் இந்த மாதம் இந்தியாவிற்கு வரவுள்ளார்.
அமெரிக்கா, இந்தியா இடையே உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் வளர்ச்சி, ஒத்துழைப்பு குறித்து அவர் இந்திய அதிகாரிகளுடன் விவாதிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் வருகை குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.