செய்திகள் :

சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவாா்த்தை: ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

post image

மாஸ்கோ / ஜெட்டா: உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னா் ரஷியா மீது உக்ரைன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியதாவது:

இதுவரை இல்லாத அளவில் உக்ரைன் ஏவிய 337 ட்ரோன்களை ரஷியா இடைமறித்து அழித்தது. அதில் 91 ட்ரோன்கள் மாஸ்கோ பிராந்தியத்தின் மேல் சுட்டுவீழ்த்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 38, 43, 50 வயது கொண்ட மூன்று போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா். மாஸ்கோ உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காா்களும் இந்தத் தாக்குதலில் எரிந்து நாசமாகின (படம்).

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா அளித்துவந்த ராணுவ உதவிகளை அவா் நிறுத்திவைத்தாா்.

இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.

அதையடுத்து, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் உக்ரைன் பிரதிநிதிகள் இது தொடா்பான பேச்சுவாா்த்தையை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். அதற்கு முன்னதாக ரஷியா மீது உக்ரைன் இதுவரை இல்லாத மிகத் தீவிரத்துடன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!

பாகிஸ்தானில் பயங்கராவதிகள் சிறைப்பிடித்துள்ள ரயிலில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 250 பயணிகளை மீட்பதில் சிக்கல் தொடர்ந்து வருகின்றது.இதுவரை 155 பயணிகளை ரயிலில் இருந்து மீட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்த... மேலும் பார்க்க

30 நாள் போர்நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உக்ரைன் முன்வைத்த 5 முக்கிய முடிவுகள்!

ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா மற்றும் ... மேலும் பார்க்க

டெஸ்லா காருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்! வெள்ளை மாளிகைக்கு புதுவரவு.!

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகை முன் அவருடன் எலான் மஸ்க் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்க அதிபரான டொனால... மேலும் பார்க்க

என்னை இங்கு புதைத்தார்கள்; சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டியவர்களுக்கு அதிர்ச்சி!

சிரியாவின் கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முன்ஜென்மத்தில் நடந்ததை நினைவில் கொண்டிருக்கும் சிறுவனைப்பற்றியதுதான் அது.பிறக்கும்... மேலும் பார்க்க

30 நாள்களில் போர்நிறுத்தம்: உக்ரைன் சம்மதம்!

ரஷியா உடனான போரை 30 நாள்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ம... மேலும் பார்க்க

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவருடன் அவரது மனைவி உஷ... மேலும் பார்க்க