ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!
மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் செல்வோர்.. இந்தத் தவறை செய்ய வேண்டாம்!
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் கட்டுக்கடங்காத கூட்டம், அம்மனை தரிசித்து அருள் பெற நாள் முழுவதும் கூட காத்திருப்பது வழக்கம்.
பலரும், தங்களது பிரார்த்தனைகளை முன்வைத்தும், பிரார்த்தனை நிறைவேறியதும் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொள்வது வழக்கம். வேண்டியது கொடுக்கும் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்பவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள்.
அதாவது, அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலின் அருகில் அமைந்துள்ளது. எப்போது காமாட்சி அம்மனை தரிசிக்கச் சென்றனாலும், அருகில் உள்ள வெள்ளீஸ்வரரையும் தரிசித்து வர வேண்டும்.
அருள்மிகு வெள்ளீஸ்வரருக்கு பார்கவேஸ்வரர் என்ற வேறு திருநாமமும் உண்டு. இத்திருத்தலத்தில் கண்பார்வை இழந்து சிவனை வேண்டியாகம் செய்த சுக்கிராச்சாரியாருக்கு சிவபெருமான் பார்வை தந்து காட்சி அளித்துள்ளார்.

எனவே, இத்தலம் சுக்கிர ஸ்தலமாகவும் உள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம் சுக்கிராச்சாரியார் இங்கு வழிபட்டதால் இப்பெயர் பெற்றது. ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மாங்காடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ வைகுண்டப்பெருமாள் திருக்கோயிலிலும் தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இந்த மூன்று கோயில்களும் ஸ்ரீ காமாட்சி அம்மனின் வரலாற்றுடன் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
இத்திருக்கோயிலில், ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ வீரபத்திரர் சன்னதி , ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ வள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வானை, ஸ்ரீ கால சம்ஹாரமூர்த்தி மற்றும் ஸ்ரீ பாலாம்பிகை , ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
சென்னையிலுள்ள நவகிரக ஸ்தலங்களில் சுக்ர ஸ்தலமாக இந்த வெள்ளீஸ்வரர் கோயில் விளங்குகிறது. இத்திருக்கோயில் செல்வம், செழிப்பு, நல்ல குடும்பம், வாகனங்கள், புகழ், சமூக அந்தஸ்து ஆகியவற்றுடன் மக்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ சுக்ர ஸ்தலமாகும்.
காமாட்சி அம்மன் கோயில் குளத்தின் அருகிலேயே இந்த கோயில் அமைந்துள்ளது. காமாட்சி அம்மன் கோயிலில் சிவன் சன்னதி இல்லை. அதுபோல வெள்ளீஸ்வரர் கோயிலிலும் தனியாக அம்மன் சன்னதி இல்லாமல், வெள்ளீஸ்வரரை வழிபட்ட அம்மன் பாதம் மட்டுமே இருக்கிறது. எனவே, காமாட்சி அம்மனை வழிபடும் பக்தர்கள். அருகில் உள்ள வெள்ளீஸ்வரரையும் வழிபட்டு இறைவன் அருள் பெரலாம் என்று கூறப்படுகிறது.