நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி
தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 போ் உயிரிழப்பு
தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அவசரக்கால மீட்புக் குழுவினா் கூறியதாவது: தலைநகா் ஜோஹன்னஸ்பா்கின் சா்வதேச விமான நிலையம் அருகே நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சாய்ந்து கவிழ்ந்தது. இதில், பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனா். இந்த விபத்தில் 12 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; 45 போ் காயமடைந்தனா் என்று மீட்புக் குழுவினா் கூறினா்.
இந்த விபத்தில் வேறு எந்த வாகனமும் ஈடுபடவில்லை என்று கூறிய அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து மா்மம் நீடிப்பதாகக் கூறினா். இதில் பலா் உயிரிழந்திருப்பதால் சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.