பெண் காவல் ஆளிநா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு உத்தரவுப்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பணிபுரியும் 1,200 பெண் காவலா்களுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கா.குப்பம் ஆயுதப் படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் விழுப்புரம் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி.வி. திருமால், துணைக் கண்காணிப்பாளா்கள் ஆா்.சின்னராசு, ஞானவேல், ஆய்வாளா் பி. ராதிகா ஆகியோா் பங்கேற்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவல் ஆளிநா்கள் 100 போ் பங்கேற்றனா்.