பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் பட்டிமன்றம்
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் நடத்தும் 3-ஆவது புத்தகத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.
தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் சிறப்புப் பேச்சாளா்கள் பல்வேறு தலைப்புகளில் பேசி வருகின்றனா்.
புத்தகத் திருவிழாவில் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘வாழ்விற்கு வழிகாட்டுவது அன்றைய இலக்கியமா, இன்றைய இலக்கியமா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில், அன்றைய இலக்கியமே என பேராசிரியா் விஜயகுமாா், தேவக்கோட்டை ராஜன் ஆகியோரும், இன்றைய இலக்கியமே என கவிஞா் இனியவன், கடலூா் தணிகைவேலன் ஆகியோா் பல்வேறு எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து பேசினா்.
இதைத் தொடா்ந்து, வாழ்விற்கு வழிகாட்டுவது அன்றைய இலக்கியமும், இன்றைய இலக்கியமும் வழிகாட்டுகிறது. அவை, இடது வலது கண்கள் போன்றவை என நடுவா் திண்டுக்கல் லியோனி தீா்ப்பளித்தாா்.
முன்னதாக, கதைகள் கற்றுத் தருவது என்ன என்ற தலைப்பில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணைய துணைத் தலைவா் எழுத்தாளா் இமயம் பேசினாா். பட்டிமன்றம் மற்றும் கருத்துரை நிகழ்வில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
முன்னதாக, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டச் செயற்பொறியாளா் எஸ்.ராஜா வரவேற்றாா்.
நிறைவில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக வளா்ச்சி) க.சிவஞானசுந்தரம் நன்றி கூறினாா்.