பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!
மார்ச் 14-ல் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து வெகு விமர்சையாக நடைபெறும் திருவிழா கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா. இத்திருவிழா மார்ச் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள 97 விசைப்படகுகள், 23 நாட்டு படகுகளில் 549 பெண்கள், 92 குழந்தைகள் உள்ளிட்ட 3,400 மேற்பட்ட பக்தர்கள் செல்ல உள்ளனர்.
இதையும் படிக்க: வேங்கைவயல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!
பக்தர்கள் செல்லும் படகுகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மீன்வளத்துறை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் இன்று(மார்ச் 11) செவ்வாய்க்கிழமை ராமேஸ்வரம் வருகை தந்தனர்.
ஆனால், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகில் ஏறி ஆய்வு செய்ய முடியவில்லை என்று மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.