செய்திகள் :

நடிகர் அஜித் அடுத்த பட இயக்குநர் இவரா?

post image

நடிகர் அஜித் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதும் பெரிய வெற்றிபெறவில்லை. அஜித்தின் முந்தைய படங்களின் விளம்பரங்களும் பெரிதாக ஆரவாரமின்றியே வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளகுட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியான நாள் முதல் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியானது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைத் தூண்டியது.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் வெளியான டீசரை அஜித் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர். மேலும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் ரசிகர் ஒருவர் மோதிரம் பரிசளித்து அன்பை வெளிப்படுத்தினர்.

இதையும் படிக்க | ஜன நாயகன் படத்தில் பிரபல இயக்குநர்கள்?

வருகிற ஏப். 10 அன்று இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஜித்தின் அடுத்தப் படத்தை நடிகர் தனுஷ் இயக்குவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமின்றி புஷ்கர் - காயத்ரி ஆகியோர் இயக்குவதாகவும் கூறப்பட்ட நிலையில் அவர்கள் அஜித்துடன் படம் எதுவும் ஒப்பந்தமாகவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனே அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.

கடந்தாண்டுகளில் அஜித் ஏற்கனவே சிவா, ஹெச்.வினோத் ஆகியோர் இயக்கத்தில் தொடர்ச்சியாக இரு படங்கள் நடித்திருந்த நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் ஆதிக் ரவிச்சந்திரனும் இணைவார் எனத் தெரிகிறது.

குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான பிறகு அடுத்த படம் குறித்த அறிவிப்பை அஜித் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.12-03-2025புதன்கிழமைமேஷம்:இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விர... மேலும் பார்க்க

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் இடைநீக்கம் ரத்து!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்த நடவடிக்கையை மத்திய விளையாட்டு அமைச்சகம் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்தது.சுமாா் 15 மாதங்களுக்குப் பிறகு சம்மேளனத்துக்கான அதிகாரம் திருப்பி அளிக்கப்பட... மேலும் பார்க்க

4-ஆவது சுற்றில் அல்கராஸ், ஃப்ரிட்ஸ்

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்... மேலும் பார்க்க

வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கும் ஓடிடி: ஜோதிகா

திரைப்பயணத்தில் தான் எதுவும் திட்டமிடவில்லை என நடிகை ஜோதிகா பேட்டியளித்துள்ளார். தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.... மேலும் பார்க்க

தி காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சையைத் தொடர்ந்து தி தில்லி ஃபைல்ஸ்!

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ’தி தில்லி ஃபைல்ஸ்’ என்ற படத்தினையும் தயாரித்துள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து எடுக்கப்பட்ட தி காஷ்மீா் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வ... மேலும் பார்க்க