ஆள்மேல் பல்லக்கில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்!
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய மாசி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் ஆள்மேல் பல்லக்கில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் மாசிமக பிரம்மோற்சவம் பத்து நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பல்வேறு மலர் மாலைகள் சூடி காஞ்சிபுர ராஜ வீதியில் காஞ்சி காமாட்சி அம்மன் வலம் வருவது வழக்கம்.
அவ்வகையில் பிரம்மோற்சவ விழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இன்று ஒன்பதாம் நாள் காலை உற்சவத்தில் ஆல் மேல் பல்லக்கில் ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் பச்சைபட்டுத்தி லக்ஷ்மி தேவி சரஸ்வதி உடன் எழுந்துள்ள நான்கு ராஜ வீதிகளில் மேளதாளம் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சி சங்கர மடம் அருகே சிறப்புத் தீபாராதனையில் ஏரளமாணோர் கலந்துகொண்டு பங்கேற்று சாமி தரிசனம் கொண்டார். ஒன்பதாம் நாள் காலை உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் தீபா ஆராதனை மேற்கொண்டு காமாட்சி அம்மனை வழிபட்டு இறையருள் பெற்றனர். இன்று இரவு மிகவும் புகழ்பெற்ற வெள்ளி ரத நிகழ்வு நடைபெற உள்ளது