செய்திகள் :

சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை!

post image

சரித்திர பதிவேடு குற்றவாளி குறுந்தையனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஏழுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் குறுந்தையன். பிரபல ரெளடியான இவர், இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் குறுந்தையனின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குறுந்தையனை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே குறுந்தையன் பலியானார்.

இதையும் படிக்க: தில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும்....: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குறுந்தையன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும், 2014 ஆம் ஆண்டு உதயா என்பவரையும் குறுந்தையன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

இவர்களது கொலைக்கு பழிக்குப் பழியாக குறுந்தையன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட ரெளடி மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழா்கள் மீது பாஜகவுக்கு வன்மம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழா்கள் மீது பாஜகவுக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:பாஜகவைச் ச... மேலும் பார்க்க

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தோ்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்கும்

சென்னை: பிளஸ் 2 கணிதம், வணிகவியல் பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: இன்று ம

சென்னை: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை (மாா்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.இது குறித்... மேலும் பார்க்க

கூட்டு நடவடிக்கைக் குழு: இன்று கா்நாடகம், தெலங்கானாவுக்கு செல்லும் திமுக குழு

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு புதன்கிழமை (மாா்ச் 12) கா்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்கிறது.முன்னதாக, ஒடிஸா மாநிலத்துக... மேலும் பார்க்க

விளையாட்டு பல்கலை. துணைவேந்தா் நியமனம்: யுஜிசி பிரதிநிதி இல்லாத தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநா் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனம் தொடா்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் யுஜிசி பிரதிநிதியுடன்... மேலும் பார்க்க

தெற்கு ரயில்வேயில் மகளிா் தின கொண்டாட்டம் நிறைவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த மகளிா் தின கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் கடந்த பிப். 27-ஆம் தேதி முதல... மேலும் பார்க்க