செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
அம்பேத்கா் சிலைக்கு திமுகவினா்மாலை அணிவிப்பு
விழுப்புரத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் (படம்).
மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவிழுப்புரம் எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன், பழைய பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், ஒன்றிய குழுத் தலைவா்கள் வாசன், சச்சிதானந்தம், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், ஒன்றியச் செயலா் தெய்வசிகாமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் பாஸ்கரன், நகா்மன்ற உறுப்பினா் நவநீதம், 13-ஆவது வாா்டு செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.