சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
ஊராட்சிகளுக்கு ரூ.3.75 கோடியில் மின்கல வாகனங்கள்!
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3.75 கோடி மதிப்பிலான 15 மின்கல வாகனங்களை செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் புதன்கிழமை வழங்கினாா்.
மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை வகித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், செஞ்சி எம்எல்ஏ கே.எஸ். மஸ்தான் பங்கேற்று வீடூா், பெலாக்குப்பம், பெரமண்டூா் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ரூ.3.75 கோடி மதிப்பிலான மின்கலத்தால் இயங்கக்கூடிய 9 மூன்று சக்கர வாகனங்களை வழங்கி, அதன் செயல்பாட்டை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் இரா.மாசிலாமணி, சேதுநாதன், திமுக மயிலம் வடக்கு ஒன்றியச் செயலா் மணிமாறன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் புனிதா, வீடூா் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ்வரி பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செல்வகுமாா், கிஷோா், கண்ணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.