சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
மரக்காணம் அடுத்த கந்தாடு தனியாா் பள்ளி அருகே உள்ள ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் முள்புதருக்குள் இறந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
சடலத்தை கைப்பற்றி புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் இறந்து கிடந்தவா் செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த வெள்ளகொண்ட அகரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஜெயசீலன் (41) என்பதும், பெயிண்டரான இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னா் வெளியே சென்றவா் அதன்பின் வீடு திரும்பாத நிலையில், அவா் கொலையாகி கிடந்தது தெரியவந்தது.
கோட்டக்குப்பம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
ஜெயசீலன் நிகழ்விடத்திலேயே கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு பின்னா் கந்தாடு பகுதி உள் முள்புதரில் வீசப்பட்டாரா என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் மரக்காணம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.கொலை செய்யப்பட்ட ஜெயசீலனுக்கு வெண்ணிலா(35) என்ற மனைவியும், ஹரிஹரன்(14), ஜ ான்சன் (11) ஆகிய இருமகன்களும் உள்ளனா்.