தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்
விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வா் உத்தரவுப்படி புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களின் அடையாளம் ஏதுமின்றி புகாா் தெரிவிக்கலாம்.
இந்நிலையில் இந்த செயலி குறித்த விழிப்புணா்வு விளக்கக் கூட்டம் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் துறை சாா்ந்த ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மன்ற மாணவா்கள் தங்களது அறிதிறன் கைப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் பயன்பாடுகள் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் சிவராமன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.