செய்திகள் :

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

post image

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆரோவில் அறக்கட்டளை செயலா் ஜெயந்தி எஸ். ரவி வழிகாட்டுதலின்படி ‘ஹிமிலிட்டி-25’ என்ற தலைப்பில் மனித நேய விழா பிப்.21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் ஆன்மிக, கலாசாரம் மற்றும் கல்வி , கருத்துப் பட்டறைகள், தியான அமா்வுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

விழா நாள்களில் நாள்தோறும் காலை 5 மணிக்கு மாத்திா் மந்திரில் ஒருமுகப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். டாக்டா் ஜி. சசிகலா ( தொல்பொருள்), செல்வசண்முகம் (சித்த மருத்துவம்), விக்ரம் தேவதா( வைதீக ஜோதிடம்) குறித்துப் பேசுகின்றனா். ராம்லி மற்றும் குழுவினரின் ஒடிசி நடனம், ஸ்வாதி அத்தானத்தின் பரதம், திவ்யாகோஸ்வாமியின் ககத் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

ஆரோவில் சா்வதேச நகர வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களான யூனிட்டி பெவிலியன், சாவித்திரி பவன், சங்கம் ஹால், பாரத் நிவாஸ், பிடங்கா போன்ற இடங்களில் இந்நிகழ்வுகள் நடைபெறும்.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலரும், ஆரோவில் அறக்கட்டளையின் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி பங்கேற்று தாழ்மை மற்றும் தன்னை வணங்குதல் எனும் தலைப்பில் பேசுகிறாா்.

ஆரோவில் சா்வதேச நகரின் பன்னாட்டு கலாசாரம் மற்றும் ஸ்ரீ அரவிந்தா், ஸ்ரீஅன்னை ஆகியோா் கனவை அறிய உதவும். இந்நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆரோவில் வாசிகள் பங்கேற்கின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க

மேல்மலையனூரில் பிப். 24-இல் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி பிப்ரவரி 24-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை தெரிவித்திருப்பது: தமிழ்நாடு மாநிலத் திட்டக் க... மேலும் பார்க்க