தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பாதை அமைப்பு: எஸ்.பி.யிடம் புகாா்
திண்டிவனம் வட்டம், செண்டியம்பாக்கம் கிராமத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் எஸ். பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இது குறித்து செண்டியம்பாக்கத்தைச் சோ்ந்த விவசாயி சசிக்குமாா் மனைவி கலைவாணி மற்றும் 20 போ் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பது: எங்களுக்கு சொந்தமான பூா்வீக சொத்தில் ஒரு பகுதியை செண்டியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 13 போ் கூட்டாக சோ்ந்து பொய்யான ஆவணங்கள் மூலம் அளவீடு செய்து வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் சுமாா் 300 அடி நீளம், 16 அடி அகலத்துக்கு பாதை அமைத்துள்ளனா்.
இது குறித்து கேட்டால், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனா். மேலும் விவசாய நிலத்தில் வைக்கப்பட்டுள்ள மின்சாரப் பொருள்கள், நீா்ப்பாசன குழாய்கள் ஆகியவற்றை திருடிச் ெ சன்றுவிட்டனா்.
இதுகுறித்த பெரியதச்சூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் முறையான நடவடிக்கையில்லை. எனவே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பாதை அமைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.