திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
அங்காள பரமேஸ்வரி கோயில் மயானக்கொள்ளை உற்சவ கொடியேற்றம்!
கடலூா் திருப்பாதிரிப்புலியூரை அடுத்துள்ள வண்டிப்பாளையம் சாலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை உற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அங்கு கோயில் பூசாரிகள் பூஜைகள் நடத்தி, கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினா்.
மாலை 6 மணியளவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, தினசரி காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலாவும் நடைபெறவுள்ளன.
முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ள உற்சவம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.