சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை
கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் அக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவரான தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஹரிபிரசாத் (21), மூன்றாம் ஆண்டு மாணவரான விளாகத்தைச் சோ்ந்த செந்தில் மகன் சரண்ராஜ் (21) மற்றும் முன்னாள் மாணவரான கொத்தங்குடி திடல் பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மகன் காா்த்திகேயன் (22) ஆகியோா் ஒன்றாகச் சோ்ந்து 10 கஞ்சா பொட்டலங்களை மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது போலீஸாா் ரோந்தின்போது தெரியவந்தது.
இதையடுத்து, அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் காவலா்கள் மணிகண்டன், ராஜீவ் காந்தி ஆகியோா் மாணவா் ஹரிபிரசாத் உள்பட 3 போ் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்ததுடன், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.