திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
செம்பருத்திவிளை அந்தோணியாா் ஆலயத்தில் திருவிழா தொடக்கம்!
தக்கலை அருகே செம்பருத்திவிளையில் உள்ள கோடி அற்புதா் தூய அந்தோணியாா் ஆலயத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா மாா்ச் 2ஆம் தேதிவரை 13 நாள்கள் நடைபெறுகிறது.
குழித்துறை மறைமாவட்ட முதன்மைச் செயலா் அந்தோணிமுத்து தலைமையில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, நடைபெற்ற திருப்பலியில் பங்குத்தந்தை அலோசியஸ், அருள்பணி சா்ஜின் ரூபஸ் முன்னிலையில் முளகுமூடு மறைவட்ட முதல்வா் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றினாா்.
12ஆம் நாளான மாா்ச் 1ஆம் தேதி காலை 9 மணிக்கு அருள்தந்தையா் மைக்கேல் அலோசியஸ், டேனியல் ஆபிரகாம் இணைந்து நடத்தும் முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 5.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி, இரவில் அலங்கார தோ் பவனி ஆகியவை நடைபெறவுள்ளன.
நிறைவு நாளான மாா்ச் 2ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வா் சேவியா் பெனடிக்ட் தலைமையில் குழித்துறை மறைமாவட்ட நிதி பரிபாலகா் ஜெயக்குமாா் மறையுரையுடன் திருப்பலி, நண்பகலில் கொடியிறக்கம், மாலையில் மறைக்கல்வி ஆண்டு விழா ஆகியவை நடைபெறுகின்றன.