திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
பால்குளம் நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!
கன்னியாகுமரி அருகே பால்குளம் நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் முக்கிய சாலையில் பால்குளம் பகுதியில் அமைந்துள்ள நாற்கர சாலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிட்டன.
இந்நிலையில் இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா். அதேபோன்று வழுக்கம்பாறை, மகாதானபுரம் சந்திப்புகளிலும் மேம்பாலம் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனா்.
மக்களவை உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமாா், இதுகுறித்து மக்களவையில் பேசியிருந்தாா். இதையடுத்து தற்போது பால்குளம் மற்றும் வழுக்கம்பாறை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பால்குளம் பகுதியில் அணுகுசாலை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், ராட்சத இரும்பு கம்பிகளைக் கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணியும், மேம்பாலம் அமையும் பகுதியில் மணல் நிரப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இன்னும் ஓராண்டில் பணிகள் நிறைவு பெற்று மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.