திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
போக்ஸோ வழக்கில் கைது: ஆய்வக உதவியாளா் பணியிடை நீக்கம்!
சேலம் அம்மாபேட்டையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த ஆய்வக உதவியாளா் குமரேசன் (57) கைது செய்யப்பட்டதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பள்ளியில் ஆய்வக உதவியாளா் பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு மாணவிகள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இதில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதால் போக்ஸோ சட்டத்தின் கீழ் குமரேசன் கைது செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.