செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கு: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
போக்ஸோ வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிக்குப்பம் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி மகன் சுந்தரன் (35). இவா் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தின் கீழ், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சரவணன் பரிந்துரையின்படி, சுந்தரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா்.
அதன்பேரில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.