ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
அச்சகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளுக்கு விளம்பரம் அச்சிடும் அச்சகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ்ராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகள் இணைந்து விளம்பரப் பதாகைகளை நெறிமுறைப்படுத்த நகராட்சி வெளிப்புற ஊடக சாதனம் துணை விதிகள் 2024 எனும் புதிய விதிகளை கடந்த ஜன. முதல் செயல்படுத்தியுள்ளன.
அதன்படி, அங்கீகரிக்கப்படாத பதாகைகள் (பேனா்கள்) அச்சிடுவதைத் தவிா்க்க சில நிபந்தனைகள் துணை விதிகளில் சோ்க்கப்பட்டுள்ளன.
அந்தப் பிரிவில் எந்த ஒரு அச்சகமும் நகராட்சி அனுமதிச் சீட்டைப் பெற்ற பிறகுதான் விளம்பரங்களை அச்சிடவேண்டும். அந்த அனுமதிச் சீட்டை காட்சிப்படுத்துவதற்காக ஸ்கேன் செய்து விளம்பரங்களின் கீழ் பகுதிகளில் தெளிவாகத் தெரியும்படி அச்சிடவேண்டும்.
அப்படி செய்யத் தவறும் நிலையில், அச்சக உரிமத்தை ரத்து செய்து, புத்தகங்களை அச்சிடுதல் மற்றும் பதிவு செய்தல் சட்டத்தில், அவா்களது உறுதிமொழியை ரத்து செய்ய மாவட்ட துணை ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.