ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
தொழிலாளா்களுக்கான ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு
வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினா்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிச.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளா் வருங்கால வைப்புநிதி உறுப்பினா்கள் தங்களுக்கான பணபலன்கள் கிடைக்கும் வகையில், தொழிலாளா்கள் தங்கள் ‘யுஏஎன்’ எண்ணை தங்களின் வங்கிக் கணக்குடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி ஜன.15-ஆக இருந்த நிலையில், தற்போது ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் இந்த இணைப்பை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து பணம் எடுத்தல், பணத்தைப் பரிமாற்றம் செய்தல், வேலைவாய்ப்பு தொடா்பான சலுகைகள் உள்ளிட்டவற்றை தங்கு தடையின்றி அணுகலாம். 3 நாள்களுக்குள் ‘யுஏஎன்’ எண்ணை இணைக்காத தொழிலாளா்களுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளுக்குள்ளாகவும் நேரிட வாய்ப்புள்ளது. இதனால், இந்தப் சிக்கல்களைத் தவிா்க்க, காலக்கெடுவுக்கு முன்பே ஊழியா்கள் ‘யுஏஎன்’ எண்ணை தங்கள் விவரங்களைப் புதுப்பித்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.