ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
நண்பரை கத்தியால் குத்திய ஓட்டுநா் தற்கொலை
நண்பரை கத்தியால் குத்திய காா் ஓட்டுநா் பணகுடி அருகே புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
பணகுடி அருகே உள்ள மேலகடம்பன்குளம் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் அய்யாபிச்சை மகன் நாகராஜன்(35). இவரது மனைவி ரம்யா(32). இவா்கள் கோயம்புத்தூரில் வசித்து வந்தனா். நாகராஜன் அங்கு காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். அதே ஊரைச் சோ்ந்தவா் சுதாகா். இவரும் கோயம்புத்தூரில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இருவரும் ஒரே ஊரைச் சோ்ந்தவா்கள் என்பதால் சுதாகா் அடிக்கடி நாகராஜன் வீட்டிற்கு சென்று வந்தாா். அங்கு நாகராஜன் மனைவி ரம்யாவுடன் சுதாகா் சகஜமாக பழகி வந்தாா். தனது மனைவியுடன் சுதாகா் பழகுவதை பிடிக்காத நாகராஜன், கடந்த 9-ஆம் தேதி அவரை கத்தியால் குத்தினாராம்.
இது குறித்து கோயம்புத்தூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து நாகராஜனை தேடி வந்தனா். இதனை அடுத்து போலீஸுக்கு பயந்து நாகராஜன் தனது சொந்த ஊரான மேலகடம்பன் குளத்திற்கு வந்தாா். போலீஸாா் கடம்பன்குளத்திற்கு வந்து தன்னை கைது செய்துவிடுவாா்கள் என பயந்த நாகராஜன், விஷம் குடித்து மயங்கினாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு வள்ளியூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].