மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 49 கோடியைக் கடந்தது!
யுபிஎஸ்சி ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின்(யுபிஎஸ்சி) ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வுகளுக்கு இன்று(பிப். 13) முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் இந்திய பொருளாதாரப் பணி(ஐஇஎஸ்) மற்றும் இந்திய புள்ளியியல் பணி(ஐஎஸ்எஸ்) துறைகளில் காலியாக உள்ள 47 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து இன்றிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 4.
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30(ஆகஸ்ட் 1, 2025 தேதியின்படி) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும்(மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் / எஸ்சி / எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை).