செய்திகள் :

ஆதரவும் எதிர்ப்பும்..! லபுஷேன் தொடர்ந்து விளையாடுவாரா?

post image

ஆஸி. நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேனின் ஃபார்ம் குறித்து முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கவலையளிப்பதாகப் பேசியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தேர்வாகியுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பிப்.19ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன.

பார்டர் கவாஸ்கர் தொடர், இலங்கை தொடரில் ஆஸி. அசத்தலாக வெற்றி பெற்றது. ஆனால், அதன் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் ரன்களை குவிக்காமல் தடுமாறி வருகிறார்.

57 டெஸ்ட் போட்டிகளில் 4,396 ரன்கள் குவித்துள்ளார். 2019இல் அறிமுகமான லபுஷேனின் ஃபார்ம் கவலையளிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

லபுஷேனுக்கு பதில் கிரீன் அல்லது இங்லிஷ்

இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியதாவது:

நம்.3 இடத்துக்கு நான் கேமரூன் கிரீன் அல்லது ஜோஷ் இங்லிஷ் உடன் செல்லுவேன். கடந்த 4 தொடர்களில் லபுஷேனின் ஃபார்ம் குறித்து கவலையாக இருக்கிறது. இது 2 அல்லது 3 ஆக இருந்தாலும் அவர் அதன் அருகில்தான் இருக்கிறார். ஆனால், அவர் நான்கு தொடர்களில் சரியாக விளையாடாதது என்னைப் பொருத்தவரை மோசமானதற்கான அறிகுறியாகும்.

ஜோஷ் இங்லிஷை நான் அணியில் எடுக்க வேண்டுமென நினைக்கிறேன். அல்லது கேமரூன் கிரீன் உடல்நலத்துடன் இருந்தால் அவரை தேர்வு செய்யலாம். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் அவரால் பங்களிப்பை அளிக்க முடியும். மேலும் பேட்டிங் ஆர்டரில் எங்கு வேண்டுமானால் அவரால் இறங்க முடியும் என்றார்.

ஸ்மித், கிளார்க் ஆதரவு

கிளார்க் கூறியதாவது:

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக அவரை தேர்ந்தெடுத்தார்கள். ஒவ்வொரு அணிக்காகவும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அவர் அதிகமாக கவுண்டி கிரிக்கெட் விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் அதிகமாக விளையாடியுள்ளதால் அவருக்கு அந்த ஆடுகளங்கள் குறித்து நன்றாகத் தெரியும் என்றார்.

டெஸ்ட்டில் நம்.3இல் விளையாடுவது மிகவும் கடினம். எண்கள் பொய் சொல்லாது. தற்போது, அவர் ஃபார்மில் இல்லை. அவருக்கான கடைசி வாய்ப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இருக்கும். இறுதிப் போட்டியில் அவர் ரன்கள் குவிக்காவிட்டால் அவருக்குப் பதிலாக வேறு யாரையாவது தேர்வு செய்யலாம் என்றார்.

ஸ்டீவ் ஸ்மித், “லபுஷேனின் ஃபார்ம் குறித்து கவலையில்லை, ரன்களை மட்டுமே அடிக்கவில்லை. இருப்பினும் அவர் ஃபார்மில்தான் இருக்கிறார்” எனக் கூறியிருந்தார்.

3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம்!

ஒருநாள் போட்டியில் விதிகளை மீறியதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

என்னதான் ஆச்சு இங்கிலாந்து அணிக்கு? -முன்னாள் வீரர் காட்டம்!

இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு? என்று கேள்வியெழுப்பும் அளவுக்கு இந்திய அணிக்கு எதிராக மோசமான தோல்வியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து. இந்த நிலையில், இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவை குறைத்து மத்திப... மேலும் பார்க்க

இந்திய அணியின் ஃபீல்டிங்கில் முழு திருப்தி..! பயிற்சியாளர் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருப்பதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பேட்டியளித்துள்ளார். இங்கிலாந்து உடனான டி20 தொடரை இந்திய அணி 4-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்று அசத்தியது. தொடரை வ... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது பெறும் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார் ஷுப்மன் கில். 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதில் ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்! ரோஹித்துக்கு சரிவு!

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் 4-5 நாள்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் துணை கேப்டன் ஷுப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய வீரர் பந்துவீச்சில் சந்தேகம்! தடைவிதிக்கப்படுமா?

ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பந்துவீசுவதற்கு தடைவிதிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்க... மேலும் பார்க்க