செய்திகள் :

என்னதான் ஆச்சு இங்கிலாந்து அணிக்கு? -முன்னாள் வீரர் காட்டம்!

post image

இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு? என்று கேள்வியெழுப்பும் அளவுக்கு இந்திய அணிக்கு எதிராக மோசமான தோல்வியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து.

இந்த நிலையில், இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவை குறைத்து மத்திப்பிட்டுவிட்டனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சென் காட்டமாகப் பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஒருநாள் போட்டிகளும் விறுவிறுப்பே இல்லாமல் முடிவடைந்துவிட்டன.

திறமையான வீரர்கள் பலர் கூட்டணி சேர்ந்துள்ள சவாலான அணியாக இங்கிலாந்து இருக்குமென்பதே, மேற்கண்ட ஒருநாள் போட்டிகள் தொடங்கும் முன் பரவலாக இருந்த எதிர்பார்ப்பு. ஆனால், மேற்கண்ட 3 போட்டிகளிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

அதிலும் குறிப்பாக, புதன்கிழமை(பிப். 12) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவிடம் 142 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளதால் பல்வேறு விமர்சனங்களுக்கு அந்த அணி வீரர்கள் ஆளாகியுள்ளனர்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய வீரர்கள், 44.3 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கான 305 ரன்களை எட்டியதால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதேபோல, முதலாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 38.4 ஓவர்களில் வெற்றி இலக்கான 249 ரன்களை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான தோல்விக்குப்பின், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் குறித்து கெவின் பீட்டர்சென் பேசியிருப்பதாவது, “நீங்கள்(இங்கிலாந்து வீரர்கள்) இந்தியாவிலுள்ள நிலவரத்தையும் இந்திய அணியையும் மிகவும் தரக்குறைவாக மதிப்பிட்டுவிட்டீர்கள். இதனை இங்கிலாந்தை சேர்ந்த ஒருவராக என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை” என்று பேசியுள்ளார்.

“இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் காயத்தின் காரணமாகவே வலைப்பயிற்சி மேற்கொள்ளவில்லை” என்கிற விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகத்தில் மேற்கண்ட விளக்கத்தை சுட்டிக்காட்டி சிலர் இங்கிலாந்து வீரர்களுக்கு ஆதரவாக பேசி வருவதை விமர்சித்துள்ள பீட்டர்சென், “விளையாட்டில் காயம் ஏற்படுவது சகஜம். அது விளையாட்டின் ஒருபகுதி. காயம் ஏற்படுவதைக் காரணம்காட்டி பேட்ஸ்மென்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதையோ அல்லது சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் பயிற்சியில் ஈடுபடுவதையோ தவிர்க்கக்கூடாது.

இவ்வகைப் பயிற்சிகளில் ஈடுபட்டதால்தான் என்னால் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள உதவிகரமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களைக் கூறி ரசிகர்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “எது எப்படியோ, இங்கிலாந்து அணி அடுத்த சில வாரங்களில் தொடங்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இதனை நிஜமாகவே நான் நம்புகிறேன், இந்த வீரர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களிடம் அபரிமிதமான திறமை உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம்!

ஒருநாள் போட்டியில் விதிகளை மீறியதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

ஆதரவும் எதிர்ப்பும்..! லபுஷேன் தொடர்ந்து விளையாடுவாரா?

ஆஸி. நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேனின் ஃபார்ம் குறித்து முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கவலையளிப்பதாகப் பேசியுள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தேர்... மேலும் பார்க்க

இந்திய அணியின் ஃபீல்டிங்கில் முழு திருப்தி..! பயிற்சியாளர் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருப்பதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பேட்டியளித்துள்ளார். இங்கிலாந்து உடனான டி20 தொடரை இந்திய அணி 4-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்று அசத்தியது. தொடரை வ... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது பெறும் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார் ஷுப்மன் கில். 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதில் ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்! ரோஹித்துக்கு சரிவு!

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் 4-5 நாள்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் துணை கேப்டன் ஷுப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய வீரர் பந்துவீச்சில் சந்தேகம்! தடைவிதிக்கப்படுமா?

ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பந்துவீசுவதற்கு தடைவிதிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்க... மேலும் பார்க்க