அமைச்சர்களின் துறை மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு!
தமிழக அமைச்சரவையில் சிறியளவில் மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் துறை பறிக்கப்பட்டு அமைச்சர் பொன்முடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் துறையையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.