செய்திகள் :

கழுத்தில் கட்டி: நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்! உறவினர்கள் போராட்டம்

post image

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மையில்லை. 100 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்று மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2 வது நாளாக முற்றுகையிட்டு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மை இல்லை. 1000 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்றும் தெரிவித்தார்.

நெல்லை அரசு மருத்துவமனையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடம் மலையடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன் (39) தனது 3வது மகன் பொன்மாறன்(4) என்ற சிறுவனுக்கு கழுத்தில் சிறிய கட்டி இருந்ததால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10ம்தேதி குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இந்நிலையில் நேற்று காலை சிறுவனுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக ஊசி போடப்பட்டுள்ளது. அதன்பிறகு திடீரென சிறுவன் உடல்நிலை குறைவால் இறந்ததாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து மருத்துவமனை டீன் அலுவலகம் முன் அமர்ந்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சிறுவனின் உறவினர்கள் கூறுகையில், சிறுவனின் கழுத்தில் இருந்த கட்டியை குணப்படுத்த அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 10ம்தேதி ஸ்கேன் எடுக்கச் சென்ற மையத்தில் இருந்த மருத்துவ ஊழியர் ஒருவர் சிறுவனுக்கு ஊசி போட்டுள்ளனர். அதன்பின்னர் திடீரென சிறுவனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

ஸ்கேன் மையத்தில் டாக்டர்கள் யாரும் இல்லை. ஆகவே சிறுவன் இறந்தது அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் என குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர் . அப்போது உயிரிழந்த சிறுவன் பொன்மாறனை வளர்த்தப் பாட்டி கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது. தொடர்ந்து 2வது நாளாக இன்று காலையிலும் சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

பெண் நடத்துநருக்கான உயரம் குறைப்பு: போக்குவரத்துத் துறை

சென்னை; அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துத் துறை செயலர் க. பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசா... மேலும் பார்க்க

அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ சுரங்கம் தோண்டும் சவாலான பணி: முதல்வர் ஆய்வு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையப் பகுதியில் சுரங்கம் தோண்டும் ... மேலும் பார்க்க

நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது? அரசு மருத்துவமனை டீன் பதில்

நெல்லை: மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மையில்லை. 100 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்று மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார்.நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மரு... மேலும் பார்க்க

திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு

சென்னை: அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாதவர் எப்படி செங்கல்லை பிடுங்க முடியும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.திருவான்மியூரில் பாஜக... மேலும் பார்க்க

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார்.சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்... மேலும் பார்க்க

பர்கூர்: விவசாயியைத் தாக்கி 22 பவுன், ரூ.50,000 கொள்ளை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

பர்கூர் அருகே வீட்டில் புகுந்து விவசாயியைத் தாக்கி, 22 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை... மேலும் பார்க்க