OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்...' - ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக...
மாமன் இரண்டாவது போஸ்டர்!
நடிகர் சூரி மாமன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: மணிகண்டனைப் பாராட்டிய கமல்!
உறவுகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.
லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமடைந்த ஸ்வாசிகா தமிழில் சூர்யா - 45 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-13/j7mqd1v9/GjmHsRSWwAATnvt.jpg)
படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மாமன் படப்பிடிப்பு திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை வெளியீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.