OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்...' - ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக...
Siragadikka aasai : முத்துவிடம் இரண்டு பேர் சிக்கிவிட்டனர், அடுத்தது யார்?!
சிறகடிக்க ஆசை சீரியலின் கடந்த இரண்டு நாள் எபிசோடுகள் விறுவிறுப்பாக நகர்ந்தன. மீனாவின் தொழிலில் பிரச்னைகளை ஏற்படுத்த நினைக்கும் சிந்தாமணி, விஜயாவை நட்பாக்கி சூழ்ச்சி செய்ய நினைத்தார். ஆனால் அவர்கள் போனில் பேசியதை மீனா கேட்டு விடுகிறார்.
முத்து இதனை குடும்பத்தினர் முன்னிலையில் போட்டுடைக்கிறார். விஜயா வேண்டுமென்றே சிந்தாமணியின் பேச்சைக் கேட்டு மீனாவை மண்டபத்திற்கு போக விடாமல் செய்துவிட்டார் என சொல்கிறார். இதனைக் கேட்டு அண்ணாமலை கோவமாகி விஜயாவை கடிந்துக் கொள்கிறார். விஜயா மாட்டிக் கொண்டோமே என்று எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/jxfnmt1q/vhal.png)
முத்து மீனாவுக்கு வங்கி கணக்கு திறக்க ஏற்பாடு செய்கிறார். சிறியளவில் பூ வியாபாரம் செய்து வந்த மீனா இப்போது மண்டப அலங்காரங்களை செய்வதால் கண்டிப்பாக வங்கிக் கணக்குத் தேவை என முத்து சொல்ல மீனா மகிழ்ச்சியடைகிறார். இந்த காலக்கட்டத்தில் வங்கிக் கணக்கு திறக்கையில் ஒரே வாரத்தில் செக் புக், பாஸ்புக் எல்லாம் வந்துவிடும் என முத்து மீனாவுக்கு விவரிக்கிறார்.
பாஸ் புக், செக் புக் உள்ளிட்டவற்றை கையில் வாங்கி, மீனா கண்கலங்கிய காட்சி நெகிழ்ச்சியடைய வைத்தது. வீட்டு வேலைகளையும் கவனித்து கொண்டு சுயமாக சிறியளவில் தொழில் தொடங்கும் பெண்களின் சிறிய முன்னேற்றமும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை இந்த காட்சி பிரதிபலித்தது.
மீனா முதல் செக்கை ரவி, ஸ்ருதிக்கு கொடுக்கிறார். மனோஜ் மீனாவை அவமானப்படுத்தும்படி பேசுகிறார். ரவியிடம் நீ கொடுத்த கடனுக்கு வட்டி வாங்கு என்று சொல்ல, ரவி , நான் பைனான்ஸ் கம்பெனி நடத்தல என்று மனோஜுக்கு பதிலடிக் கொடுக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/a4sjv77u/manl.png)
ஷோரூமில் மனோஜிடம் ரோகிணி ஏன் ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என கேட்கிறார். மனோஜ் கொஞ்சமும் அக்கறையின்றி பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்கிறார். பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் வருகின்றனர்.
அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி ஏன் இன்னும் செலுத்தவில்லை என அதிகாரிகள் கேள்விக் கேட்க மனோஜ் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். ரோகிணி சமாளித்து இரண்டு மூன்று நாட்களில் செலுத்துவிடுகிறோம் என சொல்கிறார். வீடு வாங்கி பணம் ஏமாந்த விஷயத்தையும் சொல்லி அவகாசம் கேட்கிறார். வீட்டில் வைத்து மீனாவை அவமானப்படுத்திய மனோஜுக்கு இது தேவைதான் என்பதே ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.
ரவிக்காக ஸ்ருதி அவரின் உணவகத்தில் வேலைக்கு சேர்கிறார், ரவியுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக உணவகத்தில் பார்ட் டைம்மாக சேர்கிறார். என்னதான் அடிக்கடி ரவியிடம் ஸ்ருதி சண்டைப்போட்டாலும், க்யூட்டாக எதையாவது செய்து தன் காதலை வெளிப்படுத்திவிடுகிறார்.
இன்னொரு புது காதல் ஜோடியான முருகன் - வித்யாவின் காதல் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. பிரியாணியைக் கொடுத்து வித்யாவின் மனதை கவர நினைக்கிறார் முருகன். ஆனால் ஏற்கனவே வித்யா முருகனை காதலிக்க ஆரம்பித்துவிட்டார் என்பது முருகனுக்கு இன்னும் தெரியவில்லை.
வித்யா தன் காதலை டெவலப் செய்ய மீனாவிடம் ஐடியா கேட்கிறார். மீனா முருகனிடம் மொபைல் போனை வாங்க சொல்லி சொல்கிறார். வித்யாவும் முருகனிடம் உங்களை பற்றித் தெரிந்துக் கொள்ள உங்க மொபைலை கொடுங்க என்று சொல்ல, முருகன் சற்றும் யோசிக்காமல் மொபைலை கொடுக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/acvcs5zb/annamalai.png)
மற்றொரு புறம் அண்ணாமலைக்கு மதிய உணவு பையைக் கொடுக்க பள்ளிக்கு செல்லும் முத்து அங்கு க்ருஷை பார்க்கிறார். இந்த விஷயத்தை ரோகிணியிடம் அவரின் அம்மா சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகிறார். ரோகிணி தன் அம்மாவிடம் வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்து வர சொல்கிறார். இதோடு எபிசோடு முடிகிறது.
நேற்று வெளியான ப்ரோமோவில், முத்து அண்ணாமலையின் பெயரில் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கிறார். அதற்கு விஜயா ஆரத்தி எடுத்துத் தொடங்கி வைக்கிறார்.
விஜயா-சிந்தாமணி, ரோகிணியின் அம்மா ஆகியோர் முத்துவிடம் சிக்கிவிட்டனர். அடுத்து மலேசியா மாமாவும் சிக்குவாரா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்,