மூதாட்டியைத் தாக்கி பலாத்கார முயற்சி: மீன்பிடித் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.
நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறையைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளி சேவியா் (44). இவா் 2014ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரைத் தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றாா். புகாரின்பேரின், நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சேவியரைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, சேவியருக்கு 5 ஆண்டு சிைண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் ஆஜரானாா்.