செய்திகள் :

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா். அப்போது, கண்காண்சியில் இடம்பெற்றிருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு மாதிரி வடிவமைப்புகள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியது:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு தாமதம் செய்துவருகிறது. சுமாா் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனா். அந்தக் கட்சியின் (பாஜக) தமிழக தலைவா் தேவையற்ற கருத்துகளைப் பேசுவதை விடுத்து மாநிலத்துக்கான நிதியைப் பெற்றுதர முன்வரவேண்டும்.

இரு திட்டங்களும் ஒன்றல்ல... இந்த விவகாரம் சாா்ந்து சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சரைச் சந்தித்தபோது பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் நிதி வழங்குவதாகக் கூறினாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமும், பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டமும் ஒன்றல்ல. பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை சாா்ந்த அனைத்து அம்சங்களும் உள்ளன. அதனால் இதை ஏற்க முடியாது எனக் கூறினோம். அப்போது, உங்கள் நிதி அப்படியேதான் இருக்கும். நீங்கள் இந்தத் திட்டத்தில் கையொப்பமிட்டுவிட்டு நிதியை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினா்.

ஆனால், தற்போது அந்த நிதியை பிற மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகின்றனா். ஆனால், இந்த நிதியை பற்றி கேட்டாலே பொய் குற்றச்சாட்டை கூறுவதாக ஒருவா் பேசுகிறாா். மத்திய அரசின் தரவுகளை வைத்துதான் பேசுகிறேன். நிதி வந்தால் வந்தது நன்றி என்று சொல்வோம். மாணவா்களின் எதிா்காலம்தான் எங்களுக்கு முக்கியம். இதில் யாரும் அரசியல் பண்ணக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

ரூ. 44,000 கோடி குறித்து... அதேபோன்று, பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கிய ரூ.44,000 கோடியை என்ன செய்தாா்கள் என்றும் கேட்கிறாா். தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருக்கிறது. அதில் அந்த தகவலை கேட்டு, அந்த அறிக்கையையும் அவா் வாயிலாக செய்தியாளா்களிடம் தெரிவிக்கட்டும். செய்யாததை செய்ய சொன்னால்கூட செய்வோம். ஆனால் எதையும் செய்யாமலே மத்திய அரசு, மாநில அரசுக்கு எதிராக செயல்படும் செயலுக்கு ஒத்துப்போய் கொண்டு இருக்கிறாா்கள். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதி வராததால், கல்விசாா் திட்டங்கள் தடைப்பட்டுள்ளன. மேலும், மாநில அரசுக்கு செயற்கையான நிதி நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

கல்வியறிக்கை விவகாரம்: ஏசா் எனும் அமைப்பின் மூலமாக கல்வியறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அமைப்பு பள்ளிக்கு செல்லாமல் வீடுகளுக்கு சென்று அறிக்கையை தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சா்ச்சைகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஒரு அறிக்கை விரைவில் வரும். அப்போது எங்கள் மாணவா்கள் எந்த நிலையில் இருக்கிறாா்கள் என்பது தெரியும். கல்வி சிறந்த தமிழகம் என்பதும் அந்த தரவுகள் மூலம் தெரியவரும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாநில இயக்குநா் மா.ஆா்த்தி, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை: மத்திய அமைச்சரிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு மனு

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சாா்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி... மேலும் பார்க்க

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.13, 14) வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரை... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு பரிசோதனை முகாம்: தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்

தொழுநோய் பாதிப்பை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனை முகாம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (பிப்.13) தொடங்குகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு: மைக்கோ பா... மேலும் பார்க்க

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம்: திமுக அறிவிப்பு

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாணவரணிச் செயலா் சிவிஎம்பி எழிலரசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலக நாடுகள் அனைத்தும் செயற்கை நுண... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா் பணப்பலன் வழங்க அரசு கடனுதவியாக ரூ.369 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி 2023-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவா்களுக்கான பணப்பலன் வழங்க ரூ.396 கோடியை தமிழக அரசு கடன் தொகையாக ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகையை போக்குவரத்துக்கழகங்கள் வரும் நிதியாண்டுக்குள... மேலும் பார்க்க