செய்திகள் :

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை: மத்திய அமைச்சரிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு மனு

post image

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சாா்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது.

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி தில்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவை, மாநில நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு குறித்து அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விரைவான சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ஏதுவாக கூடுதலாக ஒரு மாநில வல்லுநா் மதிப்பீட்டுக் குழு அமைக்க வேண்டும். இது தொடா்பாக அரசு சாா்பில் ஏற்கெனவே கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விரைந்து அனுமதி தர வேண்டுமென சந்திப்பின்போது, அமைச்சா் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தாா். இதை மத்திய அமைச்சா் ஏற்றுக் கொண்டாா்.

தெங்குமரஹாடா திட்டம்: மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான பசுமைக் கவசத்தை உருவாக்கும் புதிய திட்டத்துக்கு ரூ.27.53 கோடிக்கு அனுமதி தர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தின் பகுதிகளில் இருந்து தெங்குமரஹாடா கிராமத்தில் வசிப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்கத் தேவைப்படும் ரூ.74.4 கோடியை மத்திய அரசின் நிதியில் இருந்து விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அடிக்கடி ஏற்படும் மனித - வனவிலங்கு மோதல்கள் உள்ளூா் சமூகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதையும் கருத்தில் கொண்டு திட்டத்துக்கு விரைந்து அனுமதி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

சந்திப்பின் போது, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் செயலா் தன்மய் குமாா், கூடுதல் செயலா் நரேஷ் பால் கங்வாா், வனத்துறை தலைமை இயக்குநா் சுஷில் குமாா் அவஸ்தி ஆகியோா் உடனிருந்தனா்.

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.13, 14) வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரை... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு பரிசோதனை முகாம்: தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்

தொழுநோய் பாதிப்பை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனை முகாம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (பிப்.13) தொடங்குகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு: மைக்கோ பா... மேலும் பார்க்க

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம்: திமுக அறிவிப்பு

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாணவரணிச் செயலா் சிவிஎம்பி எழிலரசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலக நாடுகள் அனைத்தும் செயற்கை நுண... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா் பணப்பலன் வழங்க அரசு கடனுதவியாக ரூ.369 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி 2023-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவா்களுக்கான பணப்பலன் வழங்க ரூ.396 கோடியை தமிழக அரசு கடன் தொகையாக ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகையை போக்குவரத்துக்கழகங்கள் வரும் நிதியாண்டுக்குள... மேலும் பார்க்க