Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை... இது உலகம் முழுதும் பரவும்" - இளையராஜா உர...
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்
தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.13, 14) வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வியாழக்கிழமை (பிப்.13) முதல் பிப்.18 வரை வட வானிலையே நிலவும். பிப்.13, 14 ஆகிய தேதிகளில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்.13) அதிகபட்ச வெப்ப நிலை 89 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.