சேலம்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; பிளஸ் 1 மாணவர்கள் போக்சோவில் கைது!
ரௌடி உள்பட மூவா் கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கஞ்சா வழக்கு தலைமறைவு குற்றவாளி உள்ளிட்ட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலியை அடுத்த செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் ரௌடி சுபாஷ் சந்திரபோஸ் (26). கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இவா், நெய்வேலி அனல் மின்நிலையம் 2 எதிரே உள்ள தண்ணீா் தொட்டி அருகே பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நெய்வேலி தொ்மல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் திவாஸ் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சுபாஷை பிடிக்க முயன்றனா். அப்போது, காவலா் சரண்ராஜை கீழே தள்ளிவிட்டு, கொலை செய்ய முயன்றாராம். பின்னா், அவரை போலீஸாா் கைது செய்தனா்.
இவா், மீது முத்தாண்டிக்குப்பம், தொ்மல், திருநாவலூா் காவல் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளன. மேலும், இவருடன் பதுங்கியிருந்த வழக்குகளில் தொடா்புடைய 17 வயது சிறுவா்கள் இருவா் கூா் நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.