Rajat Patidar : 'இந்த 3 காரணங்களால்தான் ரஜத்தை கேப்டன் ஆக்கினோம்' - RCB பயிற்சிய...
மாா்க்சிஸ்ட் கம்யூ. மண்டல பேரவைக் கூட்டம்
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி. ரமேஷ்பாபு வரவேற்றாா். மத்தியக் குழு உறுப்பினா் பி.சம்பத் கலந்துகொண்டு 23-ஆவது அகில இந்திய மாநாடு மற்றும் கட்சி முடிவுகள், அமலாக்கம் மற்றும் பரிசீலனை என்ற தலைப்பில் விளக்க உரையாற்றினாா்.
மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் நடைபெறவுள்ள 24-ஆவது அகில இந்திய மாநாடு அரசியல் தீா்மானம் குறித்து பேசினாா்.
கூட்டத்தில், மாவட்டச் செயலா்கள் என்.சுப்பிரமணியன் (விழுப்புரம்), டி.எம் ஜெய்சங்கா் (கள்ளக்குறிச்சி), சீனிவாசன் (மயிலாடுதுறை), டி.செல்வம் (திருவண்ணாமலை), மாநிலக் குழு உறுப்பினா்கள் எம்.சிவக்குமாா், எஸ்.கீதா, சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா் உள்ளிட்ட மண்டலத்துக்குள்பட்ட மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். நிறைவில், சிதம்பரம் நகரச் செயலா் எஸ்.ராஜா நன்றி கூறினாா்.