`எகிப்த்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ் சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன்தான்' - பி.ஆ...
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்ட ஒதுக்கீடு குறித்த பிரச்னையை எழுப்பினர். குஜராத்தில் தொழிலதிபர் ஒருவருக்குத் திட்டத்தை ஒதுக்குவது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கோபமடைந்த அவைத்தலைவர் ஓம் பிர்லா, நடவடிக்கைகளைச் சீர்குலைக்க வேண்டாம் என்றும், அவையின் மரபைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தினார்.