செய்திகள் :

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!

post image

கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசுகையில்,

'வயநாட்டில் கடந்த டிச. 27 முதல் வனவிலங்குகளால் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு சூழ்நிலை . இந்தப் பிரச்னையை சரிசெய்ய மத்திய அரசும் மாநில அரசும் வயநாடு தொகுதிக்கு நிதி அனுப்ப வேண்டும். இந்தப் பிரச்னையை மக்களவையில் இன்று எழுப்புவேன் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க | கர்ப்பிணிகளிடையே அதிகரிக்கும் தைராய்டு! காரணங்கள், சிகிச்சைகள் என்னென்ன?

கேரள மாநிலத்தில் கடலோரம் மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!

பெங்களூரில் கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். பெங்களூரு நகர சாலைகள் எப்போதும் நெரிசல் மிகுந்தவை. இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் ... மேலும் பார்க்க

கணவனுடன் சண்டை: வட்டி வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியரை திருமணம் செய்த மனைவி!

கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு அவரது மனைவிக்கு பிடிக்காததால், தமது வீட்டுக்கு வட்டி வசூலிக்க வரும் நிதி நிறுவன ஊழியரை அந்த பெண்மணி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. பிகார் மாநிலம் ... மேலும் பார்க்க

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் காலத்தில்... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்ட ஒதுக்கீடு குறித்த பிரச்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா அறிக்கை தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும் பார்க்க