கணவனுடன் சண்டை: வட்டி வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியரை திருமணம் செய்த மனைவி!
தில்லியில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்!
தில்லியில் இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகம் இடிக்கப்பட்டு, தற்போது ரூ. 150 கோடியில் 13 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாஜக தலைமையகத்தைவிட மிகப் பெரியதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆர்எஸ்எஸ் அலுவலகம் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
தில்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கரோனா பெருந்தொற்றால் கட்டடப் பணிகள் தாமதமான நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
3.75 ஏக்கர் நிலத்தில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், 12 தளங்களுடன் 3 கோபுரங்கள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் சுமார் 75,000 பேரிடம் நன்கொடையாக பெறப்பட்ட பணத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : நேட்டோவில் உக்ரைன் இணைவது சாத்தியமில்லை: டிரம்ப்
இந்த கட்டடத்தில் அமைந்துள்ள பிரதான கலையரங்கத்துக்கு, அயோத்தி கோயில் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களின் ஒருவரான விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தில் அமைந்துள்ள நூலகத்தில் 8,500 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், 5 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவ உதவி மையமும் இந்த கட்டடத்தில் செயல்படவுள்ளது.
மேலும், ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்கான இடம் என 300 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை வருகின்ற 19 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் திறந்துவைக்கவுள்ளார்.